மட்டக்களப்பு வாவியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு வாவியிருந்து ஆண் ஒருவரின் சடலம் வெள்ளிக்கிழமை(31) மாலை மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது… மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் அமைந்துள்ள மட்டக்களப்பு வாவியில் தோணி ஒன்றில் இருவர் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது தேணி கவிழ்ந்து ஆற்றினுள் இருவரும், வீழ்ந்துள்ளனர். அதில் ஒருவர் தெய்வாதீனமாக உயிர் பிழைத்துள்ளார்.
எனினும் மற்றைய நபர் ஆற்றில் காணாமல் போயுள்ளார். பின்னர் அப்பகுதி மக்கள் இணைத்து ஆற்றினுள் தேடியுள்ள நிலையில் காணாமல் போனவர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் களுவாஞ்சிகுடி நாவலடி வீதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 36 வயதுடைய வீதிமென் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதிபதி கே.ஜீவராணி அவர்களின் உத்தரவுக்கமைய சடலத்தைப் பார்வையிட்ட களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம், சடலத்தை பி.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தி, பிரேத பரிசோதனைக்குட்படுத்தும்படி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இஸ்த்தலத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment