திருவருள் சங்க 82 ஆவது ஆண்டு நிறைவு விழாவை சிறப்பித்து போற்றிப் புகழ் மாலை வெளியீடு.
இந்தியாவில் இருந்து வருகை தந்த வணக்கத்துக்குரிய ஸ்ரீலஸ்ரீ சோமேஸ்வரானந்தகிரி சுவாமி அவர்களால் 11.01.1940 ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட திருவருள் ஆண்கள் சங்கமானது 11.01.2022 திககியன்று 82ஆவது ஆண்டு நிறைவு விழாவினை செட்டிபாளையம் சிவன் ஆலயத்தில் பக்திபூர்வமாக எளிமையான முறையில் விசேட பூசையுடன் நினைவுகூர்ந்ததோடு சங்கத்தின் வளர்ச்சியில் இதுவரைகாலம் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து அமரத்துவமடைந்தோருக்கு மௌன அஞ்சலியும் அகவணக்கமும் செலுத்தப்பட்டது.ஆலய பிரதம சிவ ஸ்ரீ ஜனார்த்தனன் குருக்களின் ஆசியுரையுடன் இவ்விழா ஆரம்பமாகியது. தொடர்ச்சியாக செயலாளர் திருவாளர் ம.புவிதரன் அவர்களினால் கடந்த வருடத்திற்கான செயற்பாட்டு அறிக்கை மற்றும் ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இணைப்பொருளாளர் ப.கருணாநிதி அவர்களின் உரையும் இடம்பெற்றது
மேலும் திருவருள் சங்கத்தின் உடைய 82வது ஆண்டு நிறைவு விழாவினை நினைவு கூரும் வகையில் ஆலயத்தின் மூல மூர்த்தியாக எழுந்தருளி இருக்கும் சிவபெருமானை நினைந்து மயில்வாகனம் புவிதரன் அவர்களினால் இயற்றிய போற்றிப் புகழ் மாலை பாடப்பட்டு இதன்போது வெளியீட்டு வைக்கப்பட்டது.
இதன் முதல் பிரதியை ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ ஜனார்த்தனன் அவர்களுக்கு செயலாளர் மயில்வாகனம் புவிதரன் அவர்கள் வழங்கிவைத்தார்.
0 Comments:
Post a Comment