படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 16வது ஞாபகார்த்த தின நிகழ்வு.2006ஆம் ஆண்டு திருமலையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 16வது ஞாபகார்த்த தின நிகழ்வு இன்று திங்கட்கிழமை(24) ஆம் திகதி காலை 10.30 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் ஞாபகார்த்த நினைவுத் தூபியில் நடைபெறுகின்றது.
கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு ஊடக அமைப்புகளின் ஒத்துழைப்புடன் நடைபெறுகின்றது. இந்ஞாபகார்த்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், நண்பர்களும் ஊடக ஆர்வலர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்புக்கள், உள்ளிட்ட பலதரப்பட்டோரையும் இதில் கலந்கொள்ளுமாறு கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம், வேண்டுகோள் விடுத்துள்ளது.
0 Comments:
Post a Comment