மட்டக்களப்பு கல்குடா கல்வி வயதுக்குட்பட்ட வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் 112வது பாடசாலை தின நிகழ்வு செவ்வாய்கிழமை (18) பிற்பகல் அதிபர் எஸ். மோகன் தலைமையில் வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் விபுலானந்தா ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஓய்வுபெற்ற அதிபரும் முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளருமான அ. சுகுமார் கலந்து கொண்டு சிறப்பித்தார்.இதன்போது 112வது பாடசாலை தினத்தில் விஷேடமாக தயாரிக்கப்பட்ட கேக் வெட்டி மகிழ்ச்சியை கொண்டாடினர்.
இதில் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் கல்விமான்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது பாடசாலை மாணவர்களின் கலை, கலாசாரத்தை பிரதிபலிக்கும் நிகழ்வுகளும் ஆசிரியருடைய கவியரங்கமும் இடம் பெற்றது.
0 Comments:
Post a Comment