களுவாஞ்சிகுடி கடற்கரையில் நடைபெற்ற சுனாமி ஞாபகார்த்த நிகழ்வு.
சுனாமி தாக்கமுற்று இன்று 17 வது ஆண்டு நினைவு நிகழ்வுகள் பல இடங்களிலும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மட்டக்களப்பு மவாட்டத்தின் களுவாஞ்சிகுடி கடற்கரையில் அமையப் பெற்றுள்ள சுனாமி நினைவுத் தூபியில் சுhனாமியினால் உயிரிழந்தவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (26.12.2021) அஞ்சலி செலுத்தப்பட்டன.
களுவாஞ்சிகுடி இளைஞர் முன்னேற்ற விளையாட்டுக் கழகத்தின் ஏற்பட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், சுனாமியில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், மண்முனை தென்எருவிப் பற்று பிரதேச சபை உறுப்பினர் மே.வினோராஜ், களுவாஞ்சிகுடி மாணிக்கப் பிள்ளையார் ஆலய குருக்கள் மு.அங்குசசர்மா, உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது களுவாஞ்சிகுடி கடற்கரையில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தி, அகவணக்கம் செய்து உயிரிழந்தவர்களை நினைவு கூரப்பட்டன.
0 Comments:
Post a Comment