மட்டு.ஆரையம்பதி வீடொன்றிலிருந்து பெருமளவு கசிப்பு மீட்பு! பெண்ணொருவர் கைது.
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பெருமளவு கசிப்புடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார தெரிவித்தார்.
கிடைக்கப் பெற்ற தகவலொன்றை அடுத்து வெள்ளிக்கிழமை(17) இரவு ஆரையம்பதி கண்ணகை அம்மன் வீதியில் குறித்த வீட்டை சுற்றி வளைத்த பொலிசார் அங்கிருந்து 15000 மில்லி லீற்றர் கசிப்பைக் கைப்பற்றியதுடன் பெண்ணொருவரையும் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவிதனர்
கைது செய்யப்பட்ட பெண் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுநத்தப்படவுள்ளதாக பொறுப்பதிகாரி பப.ண்டார மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment