26 Dec 2021

மண் மாபியாக்களின் கூடாரமாக மட்டக்களப்பு மாவட்டம் மாறிவிட இடமளிக்கக்கூடாது இராஜங்க அமைச்சர்வியாழேந்திரன் வலியுறுத்தல்.

SHARE

மண் மாபியாக்களின் கூடாரமாக மட்டக்களப்பு மாவட்டம் மாறிவிட இடமளிக்கக்கூடாது இராஜங்க அமைச்சர்வியாழேந்திரன் வலியுறுத்தல்.

நாளுக்குநாள் மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு நடவடிக்கைகளில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மாபியாக்கள் குவிந்து வருகின்றனர் . இவ்வாறு எமது மண் வளத்தை சூறையாடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது மட்டக்களப்பு மாவட்டம்  மண் மாபியாக்களின் கூடாரமாக மாறிவிட இடமளிக்கக்கூடாது.  சட்டவிரோதமாக மணல் அகழ்வு நடவடிக்கையை  தடுத்து நிறுத்தாவிட்டால் எமது மாவட்டத்தின் பல பிரதேசங்கள் அத்திப்பட்டி போல் அழிந்து போகும் நிலை காணப்படுகின்றது.

என இராஜங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மட்டக்களப்பு  மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு  உரையாற்றுகையில்  இவ்வாறு தெரிவித்தார்.

இராஜங்க அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வாழ்வாதாரம் மற்றும் உரிமைகள் சார்ந்து  பல பிரச்சினைகள் காணப்படுகின்றது அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பதற்கு மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் நாங்கள் அரசாங்கத்திடமிருந்து பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கு அமைவாக அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மக்களின் காலடிக்கு கொண்டு சேர்த்து கொண்டிருக்கின்றோம். அதில் பின்தங்கிய கிராமப் புறங்களில் உள்ள அனைத்து வீதிகளும் அபிவிருத்தி செய்யப்படுகின்றது> அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் மின்சாரம் இல்லாத கிராமங்களிலுள்ள அனைத்து வீடுகளுக்கு மின்சாரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கான வேலை திட்டமும் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் குடிநீரைப் பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் படுவான்கரை பிரதேசங்களைச் சார்ந்த  கிராம பிரதேசங்களுக்கு சுத்தமான குடிநீர் இல்லாமை பாரிய பிரச்சினையாக காணப்படுகின்றது இதற்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதற்காக நீர்ப்பாசன செழுமை வேலை திட்டத்தின் கீழ் பல வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன இதில்   தளவாய் மற்றும் இலுப்பை சேனை பெரிய புல்லுமலை மற்றும் மரப்பாலம்> ராஜபுரம்> ஆகிய பிரதேசங்களில் குடிநீரைப் பெற்றுக் கொடுப்பதற்கான பாரிய வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன இவ்வாறு பின்தங்கிய பிரதேசங்களில்  உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன இதனூடாக முயற்சியாளர்கள் உருவாக்கப்படுகின்றன.

இவ்வாறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஒருபுறம் முன்னெடுக்கப்பட்டு கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் மறுபுறம் வெளி மாவட்டங்களை சேர்ந்த மண் மாபியாக்களினால் எமது மண் வளம் அளிக்கப்பட்டு வருகின்றது ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பதுளை வீதியை சேர்ந்த பல கிராமப்பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வு   பல அரசியல் பின்னணிகளை கொண்டு தொடர்ச்சியாக  இடம்பெற்று வருகின்றது குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் மணல் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  இவ்வாறு  மணல் அகழ்வதற்காக அனுமதி வழங்கப் பட்டிருப்பது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்காகவே அன்றி வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மண் மாபியாக்களின் ஆக்கிரமிப்புக்கு அல்ல  இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் மண் வளம்  வெளி மாவட்டங்களை சேர்ந்த மண் மாபியாக்களின் கூடாரமாக மாறிவிட்டது.

இவ்வாறு சட்டவிரோத மண் அகழ்விற்கு இடம் கொடுப்போம் ஆனால் இன்னும் 20 வருடங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல கிராமங்கள் அழியும் நிலை உருவாகும். தொடர்ந்து எம்மால் இம்மாவட்டத்தின் மண்வளம் சூரையாடுவதற்கு இடம் கொடுக்க முடியாது சட்டவிரோத மணல் அகழ்வுகளை தடுத்து நிறுத்த அரசாங்கத்தோடு  இணைந்து செயற்பட்டு வருகின்றோம். எமது பிறந்த மண் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உணர்வோடு செயற்பட்டு வருகின்றோம்   அரசியல் நோக்கங்களை தவிர்த்து மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளுக்கு குரல் கொடுங்கள் என ராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கருத்து தெரிவித்திருந்தார்.



SHARE

Author: verified_user

0 Comments: