18 Dec 2021

மட்டக்களப்பு வீடொன்றில் சமையல் எரிவாயு அடுப்பு வெடிப்பு.

SHARE

மட்டக்களப்பு  வீடொன்றில்  சமையல் எரிவாயு அடுப்பு வெடிப்பு.

மட்டக்களப்பு காத்தான்குடி புதிய காத்தான்குடியில் வீடொன்றில்  வெள்ளிக்கிழமை(17) இரவு சமையல் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.

புதிய காத்தான்குடி விடுதி வீதியின் இரண்டாம் குறுக்கு தெருவிலுள்ள வீடொன்றிலேயே இந்த அடுப்பு வெடித்துள்ளது. குறித்த வீட்டில் வீட்டார் சமையல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இந்த அடுப்பு வெடித்ததாக தெரிவித்தனர்.

இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.









SHARE

Author: verified_user

0 Comments: