கவிஞர் விமைக்கல்கொலின் அவர்களுடைய எழுதித்தீரா பிரியங்கள் மற்றும் இவனைச்சிலுவையில் அறையுங்கள்.
மகுடம் கலை இலக்கியவட்டம் நடாத்திய கவிஞர் விமைக்கல்கொலின் அவர்களுடைய எழுதித்தீரா பிரியங்கள்
மற்றும் இவனைச்சிலுவையில் அறையுங்கள் எனும் இருநூல்களின் ஒருங்கிணைந்த வெளியீட்டுநிகழ்வு
மட்டக்களப்பு நூலக கேட்போர் கூடத்தில் மிகச்சிறப்பான நிகழ்வாக நிகழ்ந்தேறியது.
இந்நிகழ்வின் அதிதிகளாக மட்டக்களப்புமாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் மேதிகசெயலாளர் புண்ணியமூர்த்தி பிரதேசசெயலாளர் கலைஞர் இராசாத்தி தவராசா மற்றும் வர்த்தகர் இரஞ்சிதமூர்த்தி அவர்களும் பங்கேற்று சிறப்பித்தனர் இந்நூல்வெளியீட்டு நிகழ்வின் நிகழ்ச்சித்தொகுப்பினை கவிஞர் சோலையூரான் திருதனுஷ்கரன் அவர்கள் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
அகத்திணை புறத்திணை சார்ந்ததான தமிழ் இலக்கிய மரபினடிப்படையிலேயே
இவ்விரு நூல்களையும் நிகழ்கால இலக்கிய உலகிற்கேற்ப படைத்தளித்துள்ளதாக நூலாசிரியர்
திரு வி மைக்கல்கொலின் அவர்கள் தனது நன்றியுரையிலே சிறப்பாக கருத்துரைத்தார்.
0 Comments:
Post a Comment