முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கு கொவிட்-19 பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி வைப்பு.
முச்சக்கர வண்டியில் செல்லும் மக்களுக்கும், அதன் ஓட்டுனர்களுக்கும் இடையில் கொவிட்-19 பதவுதலைக் தடுக்கும் வகையிலும், கட்டுப்படுத்தும் வகையிலும், செலான் வங்கியின் களுவாஞ்சிகுடி கிளையால் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் சேவையிலீடுபடுகின்ற முச்சக்கர வண்டி ஓட்டுனர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வியாழக்கிழமை(30) வழங்கி வைக்கப்பட்டன.
களுவாஞ்சிகுடி செலான் வங்கி கிளையில் வைத்து நடைபெற்ற இந்நிகழ்வில், அப்பகுதி பொதுசுகாதார பரிசோதகர் கே.இளங்கோ, செலான் வங்கியின் களுவாஞ்சிகுடி முகாமையாளர் வி.சஞ்ஜெயன், பிராந்திய முகாமையானர் முஹமட் றிஸ்வி குசைன், உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டு அப்பகுதியில் சேவையிலீடுபடுகின்ற 100 முச்சக்கர வண்டி ஓட்டுனர்களுக்கு செலான் வங்கியின் நாமம் பொறிக்கப்பட்ட உரிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
0 Comments:
Post a Comment