கடலலையில் சிக்குண்டு படகு உடைவு தெய்வாதீனமாக உயிர் பிழைத்த மீனவர்கள்.
மட்டக்களப்பு மாவட்டம் கோட்டைக்கல்லாறு கடற் பகுதியில் மீண்பிடிக்கச் சென்ற படகு ஒன்று அலையில் அகப்பட்டு உடைந்துள்ளதோடு, அதில் பயணித்த மீனவர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பாக கரைக்குத் திரும்பியுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…
கோட்டைக்கல்லாறு கடற் பகுதியில் வியாழக்கிழமை(11) அதிகாலை 1.30 மணியளவில் 3 படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கப் சென்றுள்ளனர். அதில் 3 பேர் சென்று கொண்டிருந்த படகு ஒன்று கடலலையில் சிக்குண்டு குறித்த படகு கவிழ்ந்து இரண்டாக உடைந்துள்ளது. இந்நிலையில் அதில் சென்று கொண்டிருந்த 3 மீனவர்களும், அருகில் மற்றய படகில் சென்ற மீனவர்களால் தெய்வாதீனமாகக் காப்பாற்றப்பட்டுள்ளதோடு, ஒருவாறு உடைந்த படகையும் கரைக்குக் கொண்டு சேர்த்துள்ளதாக பாதிக்கப்பட்ட மீனர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் சுமார் 7 இலெட்சம் ரூபாய்க்கு மேல் தமக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக குறித்த மீனர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தற்போது வட கீழ் பருவப் பெயற்சி மழை ஆரம்பித்துள்ளதனால் மீனவர்களை மிகவும் அவதானமாக நடாந்து கொள்ளுமாறு வானிலை அவதான நிலையம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment