இளவயது திருமணத்தை உடன் நிறுத்த வேண்டும் – பாசாலை அதிபர் ஆதங்கம்.
மேற்படி பாடசாலைக்கு 564000 ரூபா பெறுமதியான கணிணி உள்ளிட்ட அதனோடிணைந்த பொருட்களை வழங்குவதற்கு இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை ஊடகா வழங்குவதற்கு லண்டனில் வசிக்கும் ஒரு சமூகசேவையாளர் முன்வந்துள்ளார். அதில் முதற்கட்டமாக ஒரு தொகுதி கணிணி உள்ளிட்ட பொருட்கள் செவ்வாய்கிழமை(23) வழங்கி வைக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்குடா கல்வி வலயத்தின் கோட்டக்கல்வி அதிகாரி கே.ஜெயவதனன், ஆசிரிய ஆலோசகர் விஜிலியஸ், இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைத் தலைவர் த.வசந்தராசா, பொருளாளர் வ.சக்திவேல், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பாடசாலை அதிபர்…
கடந்த யுத்த காலத்திலிருந்து இற்றைவரையில் இப்பாடசாலையில் இருந்து கற்பித்து வருகின்றேன். ஆசிரியர்கள் நூற்றுக்கணக்கான கிலோ மீற்றர் கடந்து வந்து இங்குள்ள மாணவர்களின் நலன் கருத்தி தம்மை அற்பணித்து பாடம் புகட்டி வருகின்றார்கள். மாணவர்களும், கல்வி பற்பதற்குத் தயாராக உள்ளார்கள். ஆனால் இப்பகுதியிலுள்ள பெற்றோர்கள் மாணவர்களிளை பாடசாலை நேரங்களில் தொழில்களுக்கு அனுப்புவதும், பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு வழங்காத நிலைமையும் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
இதனைவிடுத்து பாடசாலைப் பருவத்திலேயே மாணவர்களுக்கு அந்த பிஞ்சு வயதில் திருமணம் செய்து வைக்கின்ற துர்ப்பாக்கிய நிலமையும் இப்பகுதியில் காணப்படு வருவதானது மிகுந்த வேதனையளிக்கின்றது. இந்த நிலைமைய இன்னும் தொடர விடாமல் பொற்றோர் பார்த்துக் கொள்ள வேண்டும். மதுரங்கேணிக் குளத்திலிருந்தும் அரச உத்தியோகஸ்த்தர்கள் உருவாக வேண்டும். அதற்கு தமது பிள்ளையின் கற்றல் நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்கள் எவ்வாறு முயற்சி எடுக்கின்றார்களோ அதுபோல் பெற்றோரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
தற்போது மிகவும் பெறுமதியான கணிணி, பிறிண்டர், லெப்டொப், உள்ளிட்ட கற்றலை இலகுவாக்கும் சாதனப் பொருட்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதனை இந்த மாணவர்கள் அனுபவிக்க வேண்டும். இதற்கு உதவிய செஞ்சிலுவை அமைப்புக்கு உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment