3 Nov 2021

கொட்டும் மழையிலும் களுவாஞ்சிகுடியில் கொதித்தெழுந்த அதிபர் ஆசிரியர்களின் போராட்டம்.

SHARE

கொட்டும் மழையிலும் களுவாஞ்சிகுடியில் கொதித்தெழுந்த அதிபர் ஆசிரியர்களின் போராட்டம்.

பல்வேறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து புதன்கிழமை(03) பிற்பகல் கொட்டும் மழைக்கு மத்தியில் மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு(களுவாஞ்சிகுடி) தேசிய பாடசாலைக்கு முன்பாக பதாகைகளை ஏந்தியவாறு அதிபர், ஆசிரியர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபனர்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிபர்கள், ஆசிரியர்கள் அச்சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் பொன்னத்துரை உதயரூபன், உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

பட்டிருப்பு(களுவாஞ்சிகுடி) தேசிய பாடசாலைக்கு முன்பாக சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் பின்னர் பேரணியாகச் சென்று பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகம் வரைச் சென்று அங்கும் கோசங்களை எழுப்பினர்.

ஆதிபர் ஆசிரியர்களின் 24 வருட சம்பள முரண்பாட்டை நீக்கு, அதிபர் ஆசிரியர்களின் சேவையைஅகப்படுத்தப்பட்ட சேவையாக அங்கீகரி, சுபபோதினி திட்டத்தை செயல்படுத்து, தரமான கல்விக்கு வளங்களை வழங்கு, மொத்த தேசிய வருமானத்தில் கல்விக்கு 6 வீதத்தை ஒதுக்கு, அதிபர், ஆசிரியர், பெற்றோர்களுக்கு, அழுத்தம் கொடுப்பதை நிறுத்து, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக் கழக சட்டமூலத்தை அமுல்படுத்தாதே, அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கான உயர் நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்து, இலவசக் கல்வியை தனியார்மயப்படுத்தாதே, அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்கி அதிபர் ஆசிரியர் சேவையை கௌரவப்படுத்து, அரசே தரமான கல்விக்கு உடனடித் தீர்வு வழங்கு, போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு இதன்போது அதிபர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.













SHARE

Author: verified_user

0 Comments: