9 Nov 2021

வாசிக்க இடர்பாடும் மாணவர்களுக்கான விசேட பயிற்சி.

SHARE

வாசிக்க இடர்பாடும் மாணவர்களுக்கான விசேட பயிற்சி.

மட்/ககு/காயன்குடா கண்ணகி வித்தியாலயத்தில் தரம் 5 லிருந்து 8 வரை எழுத வாசிக்க இடர்படும் மாணவர்களை கருத்திற்கொண்டு அவர்களுக்கு வாசிப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கோடு பாடசாலை சமூகத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக  செவ்வாய்கிழமை (09) அம்மாணவர்களுக்கான  விசேட பயிற்சிக்கான ஆரம்ப நிகழ்வு பாடசாலை அதிபர் அவர்கள் தலைமையில்  மட்டக்களப்பிலிருந்து இயங்கிவரும் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஜெயகுமணன்,  மற்றும் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் நிறைவேற்று பணிப்பாளர் க.பிரதீஸ்வரன் ஆகியோர்  பங்குபற்றினர்.

பல்வேறு கல்வி செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும்  இவ்வாறான செயற்பாடு  இப்பிரதேசத்தில் பின்னடைவாக காணப்படும்  பாடசாலைகளில் அவசிய தேவையாக இருப்பதால்,  பரீட்சாத்தமாக இதனை ஆரம்பிப்பதாகவும் இதற்கு கனடாவில் இருந்து  முருகேசு விசாகன் அவர்கள் நிதி வழங்கவிருப்பதாகவும்   விவேகானந்த அறக்கட்டளையின் நிறைவேற்று பணிப்பாளர் இதன்போது தெரிவித்தார்.

இதுபோன்று இப் பிரதேசத்தில் இன்னும் பின்தங்கிய  15 க்கு மேற்பட்ட பாடசாலைகள் உள்ளதென்றும் அவற்றிலும் இவ்வாறு எழுத்து வாசித்தல் இடர்படும் மாணவர்கள் காணப்படுவதாகவும் அவர்களுக்கும் இவ்வாறான திட்டங்களை மேற்கொள்ளும் போது எமது கல்விச் சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் இதன்போது கோட்டக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.









 

SHARE

Author: verified_user

0 Comments: