உலக உணவு திட்டத்தின் கீழ் வவுணதீவு பிரதேசதில் பண்ணையாளர்களுக்கு பால் கொள்கலன்கள் வழங்கிவைப்பு.
உலக உணவு திட்டத்தின் கீழ் வவுணதீவு பிரதேசதில் பால் உற்பத்தியாளர்களுக்கு பால் கொள்கலன்கள் வழங்கும் நிகழ்வு மண்டபத்தடி கால்நடை அபிவிருத்தி அலுவலகத்தில் புதன்கிழமை(10) இடம்பெற்றது
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து உலக உணவு திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 83 சிறு கால்நடை வளர்ப்பு பண்ணையாளர்களுக்கு இந்த கொள்கலன்கள் வளங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மண் முனை மேற்கு பிரதேச கால்நடை வைத்தியர் சுபாசுகி ரங்கநாதன்> மண்முனை மேற்கு பிரதேசெயலக உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன்> உலக உணவு திட்டத்தின் மாவட்ட திட்ட இணைப்பாளர் பத்மராஜனி மற்றும் கால்நடை அபிவிருத்தி கூட்டுறவு சங்க தலைவர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மேற்படி தொள்கலன்களை பயனாளிகளுக்கு கையளித்தனர்.
இதன் போது மாடு வளர்ப்பு தொடர்பாகவும் பால் உற்பத்தியை அதிகரித்தல் தொடர்பாகவும் கால்நடை வைத்தியரினால் இங்கு வருகை தந்த கால்நடை சிறு பண்ணையாளர்களுக்கு விளக்கங்களும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
வறுமையை நீக்கி குடும்ப பொருளாதாரத்தை உயர்ந்தும் நோக்குடன் உலக உணவுத்திட்டத்தினால் இப்பிரதேச செயலாளர் பிரிவு தெரிவு செய்யப்பட்டு திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment