3 Nov 2021

உதயகுமார் கல்வி மையத்தினால் முன்னெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வு.

SHARE

உதயகுமார் கல்வி மையத்தினால் முன்னெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வு.

க.பொ.த.சாதாரண தரத்தில் சித்தியடைந்த மாணவர்களை ஊக்கப்படுத்தி அவர்களை வாழ்த்தி பாராட்டும் திட்டத்தினுடாக ம.மமே கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில்  இவ்வருடம் க.பொ.த.சாதாரண தரத்தில் சித்தியடைந்த 10 மாணவர்களுக்கு வளர்ச்சியின் உச்ச நிலை கல்வி எனும் தொனிப்பொருளில்  உதயகுமார் கல்வி மையத்தினுடாக பாராட்டுகளும் கற்பதற்கான உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வானது பாடசாலையின் அதிபர் விக்கினேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.அஇந்நிகழ்வில் உதயகுமார் கல்வி மையத்தின்  செயலாளர் ம.ஜெயக்கொடி,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,nஉதயகுமார் கல்வி மையத்தின் தலைமை ஆலோசகருமான பா.அரியநேத்திரன் ஜயா,மக்கள் நல இளைஞர் மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வே.அன்பழகன்,உதயகுமார் கல்வி மையத்தின் உறுப்பினர்கள் பாடசாலையின் தலைமை ஆசிரியர் குகநாதன், சக ஆசிரியர்கள் மாணவர்கள் கிராமத்தின் சமுகமட்ட நிர்வாகிகள் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

நம் அச்சத்தை போக்கி மடமைகளை அழிக்கும் ஒரே ஆயுதம் கல்வி மட்டுமே. இன்றைய உலகில் இன்றியமையாத ஒன்றாக இருப்பது கல்வியே ஆகும். கல்விதான் ஒருவனை அறிவாளி ஆக்கிறது. ஒருவனுடைய அறிவுக்கண்ணை திறக்கும் திறவுகோல் கல்வியாகும். அனைவரும் கல்விக்காய் ஒன்று படுவோம் மாணவர்களின் செயல் திறன்களை ஊக்குவிக்கும் அதிபர்கள் ஆசிரியர்கள் அனைவருக்கும் பலகோடி நன்றிகளை உதயகுமார் கல்வி நிலையத்தின் ஊடாக தெரிவித்துக்கொள்கின்றோம். என உதயகுமார் கல்வி நிலையத்தினர் தெரிவித்துள்ளனர்.









SHARE

Author: verified_user

0 Comments: