போரதீவுப் பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் சபை அமர்வின்போது ஆர்ப்பாட்டம்.
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேச சபை அமர்வின்போது பதாகைகளை ஏந்தியவாறு உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் 45 வது சபை அமர்வு வெல்லாவெளியில் அமைந்துள்ள பிரதேச சபையின் சபா மண்டபத்தில் தவிசாளர் யோ.ராஜனி தலைமையில் வெள்ளிக்கிழமை(12) நடைபெற்றது. இதன்போது பல்வேறு பிரச்சனைகள் தொடர்பில் கலந்து கொண்ட உறுப்பினர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள தொலைத் தொடர்பு கோபுரங்கள், வீதி மின் விளக்குகள் பொருத்துதல், பழுகாமத்தில் அமைந்துள்ள திண்மக் கழிவகற்றும் இடம், பழுகாமத்தில் அமைந்துள்ள வண்ணான் குளத்தில் மீன்வளர்த்தல், நூலகங்களில் அமைந்துள்ள புத்தகங்கள் காணாமல் போனமை மற்றும் பழுதடைந்துள்ளமை, வெல்லவெளி பொலிசாரின் நடவடிக்கைகளில் திருப்தியின்மை, பிரதேச சபையின் முன்னால் அமைக்கப்பட்டுள்ள இராணுவ சோதனைச் சாவடி, காட்டு யானைகளின் பிரச்சiனைகள், உள்ளிட்ட பல விடையங்கள் தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர்கள் தத்தமது கருத்துக்களை முன் வைத்தனர்.
இந்நிலையில் சபை அமர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தவேளை, உறுப்பினர்கள் வாசகங்கள் எழுத்தப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர். பருவத்தில் பசசை வழங்கா பயிரும்; மண்ணாகும், பசளை வழங்கா அரசும் வீணாகும், சீனி அரிசி சிமெந் விலை அதிகரிப்பை நிறுத்து, அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பால் அவதியுறும் ஏழை விவசாயிகள், பசளை இன்றி பயிர் இல்லை விவசாயம் இன்றி நாடு இல்லை, அரசே அரசே உரத்தைக் கொடு, உள்ளிட்ட பல வாசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி கோசங்களையும் சபை அமர்வின்போது எழுந்து நின்று இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி உறுப்பினர் சு.விக்னேஸ்வரன் அந்த ஆர்ப்பாட்டத்தைப் புறக்கணித்து கதிரையை விட்டு எழும்பாமல் அமர்ந்தபடியே இருந்தார்.
இறுதியில் மேற்படி பிரதேச சபையின் முன்னால் பொலிஸ் மற்றும் இராணுவதினர் இணைந்து அமைத்துள்ள
சோதனைச் சாவடி, மற்றும் வீதித் தடை, ஆகியன பிரதேச சபைக்கு வரும் மக்களுக்கும், அதன் அருகில் உள்ள பேரூந்து தரிப்பிடத்தில், மற்றும் அதனருகில் அமைந்துள்ள ஆலயம் ஆகியவற்றும் பெரும் இடைஞசலாக இருந்துவருவதாகத் தெரிவித்து அதனை தவிசாளர் உள்ளிட்ட பலரும் பார்வையிட்டனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரத்ததில் உள்ள போரதீவுப் பற்றுப் பிரதேச சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 8 உறுப்பினர்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 3 உறுப்பினர்களையும்,
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 2 உறுப்பினர்களையும், சுயேட்சைக்குழு 2 உறுப்பினர்களையும், தமிழர் விடுதலைக் கூட்டணி 1 உறுப்பினரையும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி 1 உறுப்பினரையும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 1 உறுப்பினரையும் கொண்டு கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment