18 Nov 2021

கிராமங்களுக்குள் புகுந்த காட்டு யானைக்கூட்டம்.

SHARE

கிராமங்களுக்குள் புகுந்த காட்டு யானைக்கூட்டம்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கொனாகொல்ல, ஜௌசிறிபுர, உள்ளிட்ட அப்பகுதியில் அமைந்துள் கிராமங்களுக்குள் செவ்வாய்கிழமை(16) இரவு புகுந்த காட்டுயானைகள் அங்கிருந்த பயன்தரும் பல மரங்களை துவம்சம் செய்துவிட்டுச் சென்றுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கிராமங்களுக்குப் புகுந்து மா, பலா, வாழை, அன்னாசி,










கரும்பு, உள்ளிட்ட பயன் தரும் பல மரங்களை இவ்வாறு உடைத்து சரித்து விட்டுச் சென்றுள்ளதாகவும், இதனால் தாம் பரம்பரை பரம்பரையாகச் செய்து வந்த வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், அப்பகுதி மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டதின் எல்லைப் பகுதியில் மிக நீண்டகாலமாகவிருந்து இவ்வாறு காட்டு யானைகளின் அட்டகாசங்களும், தொடர்கதையாகவுள்ளதை குறிப்பிடத்தக்கதாகும்.


SHARE

Author: verified_user

0 Comments: