சித்தாண்டி அருள்மிகு ஸ்ரீ மஞ்சாடி விநாயகர் ஆலய புனராவர்த்தன மகா கும்பாபிசேகம்.
மட்டக்களப்பில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு சித்தாண்டி, மாவடிவேம்பு அருள்மிகு ஸ்ரீ மஞ்சாடி விநாயகர் ஆலய புனராவர்த்தன அஸ்டபந்தன மகா கும்பாபிசேகம் புதன்கிழமை(10) மிகச்சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பின் வடக்கே சித்தாண்டி மாவடிவேம்பில் பன்னெடுங்காலமாக வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மஞ்சாடி விநாயகர் ஆலயத்தின் கும்பாபிசேக கிரியைகள் கடந்த 08 ஆம் திகதி ஆரம்பமானது. நுவரெலியா ஸ்ரீ லங்காபுரி ஈஸ்வர காயத்திரி பீடத்தின் தலைவர் தேசகீர்த்தி தர்புருஸ சிவாச்சாரியார் சிவஸ்ரீ யோ.கோமகன் குருக்கள் தலையில் ஆரம்பமான கும்பாபிசேக கிரியைகளில் செவ்வாய்க்கிழமை அடியார்கள் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வுகள் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து புதன்கிழமை(10) காலை புண்ணியாஹவாசனம், யாகபூஜை, மஹாபூரணாகுதி, விசேட தீபாராதணைகள் நடைபெற்று பிரதான கும்பம் மற்றும் கும்பங்கள் கொண்டுசெல்லப்பட்டு மஹாகும்பாபிசேகம் சிறப்பாக நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க பக்தர்களின் ஆரோகரா கோசத்திற்கு மத்தியில் பிரதான தூபி உட்பட பரிபாலன ஆலையங்களின் கும்பாபிசேகம் சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து மூலமூர்த்திக்கு பிரதான கும்பம்கொண்டுவரப்பட்டு பக்தர்களின் ஆரோகரா கோசத்திற்கு மத்தியில் கும்பாபிசேகம் செய்யப்பட்டது.
கும்பாபிசேகத்தினை தொடர்ந்து விசேட பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு ஆசி வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றன. கொரனா அச்சுறுத்தல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு கும்பாபிசேக உற்சவங்கள் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment