12 Nov 2021

உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம் எனும் தொனிப்பொருளில் இரத்த தானம்.

SHARE

உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம் எனும் தொனிப்பொருளில் இரத்த தானம்.

மட்டக்களப்பு மாவட்ட முற்போக்கு தமிழர் கழகத்தின் இளைஞர்களினால் “உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம் எனும் தொனிப்பொருளில் இரத்த தானம்

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களின் ஜனன தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட முற்போக்கு தமிழர் கழகத்தின் இளைஞர்களினால் “உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம் எனும் தொனிப்பொருளில் இன்று 12.11.2021  தொடக்கம் எதிர்வரும் 21.11.2021  திகதிவரை மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இரத்ததான முகாம் நடத்தப்படுகின்றது.

இந்நிகழ்வில் ஒரு கட்டமாக கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் முற்போக்கு தமிழர் கழகத்தின் பிராந்திய காரியாலயத்தில் மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலை வைத்தியர் மனோ துசாந்தன்  தலைமையிலான அதிகாரிகளும் மற்றும் மட்டகளப்பு மாவட்ட போதனா வைத்தியசாலை இரத்த வங்கி அதிகாரிகள் என பலரின் பங்குபற்றலில் இந்த இரத்த தானம் வழங்கும் நிகழ்வு காலை 08.00 மணி முதல் மாலை 02.00 மணி வரை இடம்பெற்றதுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது இதன்போது பெருந்திரளான இளைஞர்கள்    இரத்த தானம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.













SHARE

Author: verified_user

0 Comments: