விவசாய உற்பத்தியில் மட்டக்களப்பு 4வது இடத்தில் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்.
பெரும்போக வேளாண்மைச் செய்கையின் பின்னர் இடைப்போகம் அறுவடை செய்து ஒரு மூடை நெல்லை இரண்டு மடங்கு விற்பனை செய்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனைப் பார்க்கும்போது சந்தோசமாகவுள்ளது. எம்மைப் பொறுத்தளவிற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லா வளங்களும் கொட்டிக்கிடக்கின்றன. மட்டக்களப்பு மாவட்டம் விவசாய உற்பத்தியிலே 4வது இடத்தில் உள்ளது. அனுராதபுரம், பொலநறுவை, அம்பாறைக்கு அடுத்ததாக நமது மட்டக்களப்பு மாவட்டம் விவசாய உற்பத்தியிலே திகழ்கின்றது. என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவின் கடுக்காமுனை பிரதேசத்தில் பண்டையவெளி மற்றும் படையாண்டவெளி படையாண்ட குளம் ஆகிய பிரதேசங்களில் இடை போக அறுவடை விழா சனிக்கிழமை(06)இடம்பெற்றது.
கடுக்காமுனை கமநல அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற
இந்த அறுவடை விழாவில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் மேலதிக மாவட்ட
செயலாளர் சுதர்சனின் ஸ்ரீகாந்தன் மண்முனை மேற்கு பிரதேச மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை
பிரதேச செயலாளர், அப்பகுதி விவசாயிகள் உள்ளிட் பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர். இதன்போது அவர் மேலும்
தெரிவிக்கையில்…
எம்மிடம் இருக்கின்ற நீர்வளம், நில வழங்களை
சரியாகப் பயன்படுத்தினால், நிற்சயமாக மாவட்டம் பூராகவும் 3 போகமும் வேளான்மை செய்கை
பண்ண முடியும். அதுபற்றி நாம் சிந்திக்க வேண்டும். 205000 ஏக்கர் பெரும்போகம் செய்கை
பண்ணவேண்டிய இடத்தில் சுமார் 25000 இற்கு மேற்பட்ட ஏக்கர்களில் விவசாயம் செய்யாமல்
விடப்படுகின்றன. சிறுபோகத்தில் சுமார் 80000 ஏக்கர் நிலப்பரப்பில்தான் செய்கை பண்ணப்படுகின்றன
ஆனால் சுமார் 100000 ஏக்கர்களில் சிறுபோகம் செய்கை பண்ணாமல் விடப்படுகின்றன. இடைப்போகம்
செய்வதே இல்லை. ஆனால் படுவாங்கரையில் நீர் வளமும், நிலவளமும் இருக்கின்றன. மாவட்டத்தில்
410 குளங்கள் இருக்கின்றன அதிலே அரைவாசிக்கு மேற்பட்ட குளங்கள் எதுவித புணரமைப்புமின்றிக்
காணப்படுவததான் விவசாயிகளுக்குப் பெரும் சவாலாக இருக்கின்றன. சரியான நீர்ப்பாசன முறைமை
இல்லை. நீர்ப்பாசன முறைமையில் இன்னும் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
மாறாக நீர்பாசன பொறியியலாளர்கள், அதனோடிணைந்த
அதிகாரிகள் மட்டக்களப்பு மவாட்ட செயலக அதிகாரிகள் வரைக்கும், இரவு பகலாக கடமை செய்கின்றார்கள்.
ஆனால் நாங்கள் பிரச்சனையை வைத்து அரசியல் செய்யவில்லை. அந்தப் பிரச்சனைகளுக்குரி தீர்வைப்
பெற்றுக் கொடுப்பதற்கு நாங்கள் வேலை செய்கின்றோம் அததைத்தான் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment