இலஞ்சம் பெற்றார் என்ற சந்தேகத்தின் பெயரில் அரச உத்தியோகஸ்த்தர் ஒருவர் கைது.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபையில் பணிபுரியும் வருமானவரி பரிசோதகர் ஒருவர் செவ்வாய்கிழமை(05) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது… கொழும்பிலிருந்து வருகை தந்த இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் பிரதிநிதிகள், மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபையில் பணிபுரியும் வருமானவரி பரிசோதகர் ஒருவரை தமது பிரதேச பையின் முன்னால் வைத்து கைது செய்து களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதாகத் தெரிவித்துவிட்டு கொண்டு சென்றதாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் ஞானமுத்து யோகநாதன் தெரிவித்தார்.
பிரதேச சபையின் முன்னால் காரில் வந்த ஒருவரிடம் குறித்த வருமான வரி பரிசோதகர் இலஞ்சம் பெற்றதாகவும் அதனை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் பிரதிதிதிகள், அவதானித்து இலஞ்சம் கொடுத்தவரை, கைது செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.
0 Comments:
Post a Comment