5 Oct 2021

பெரிய கல்லாறு பொது மைதானத்தினுள் கடினபந்து விளையாடுதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

SHARE

பெரிய கல்லாறு பொது மைதானத்தினுள் கடினபந்து விளையாடுதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பெரிய கல்லாறு பொது மைதானத்தினுள் கடினபந்து விளையாடுவதை தற்காலிகமாக இடைநிறுத்தமாறு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் ஞானமுத்து யோகநாதன் தமக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக கல்லற்றில் அமைந்துள்ள விளையாட்டுக் கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.

கல்லாறு மத்திய விளையாட்டுக் கழகம், கல்லாறு விளையாட்டு கழகம், ஸ்ரார் விளயாட்டுக் கழகம், ஒலிம்பியா விளையாட்டுக் கழகம் வலம்புரி விளையாட்டுக் கழகம்,  John de Britto Sports Club, Spider Sports Club Butterfly Sports Club, ஆகியோருக்கு இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவதுமேற்படி விடயம் தொடர்பாக பெரியகல்லாறு பொது மக்கள் மற்றும் ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய பரிபாலன சபை ஆகியோரால்  செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பாகவும், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் விளையாட்டு உத்தியோகத்தரின் அறிக்கைக்கு அமைவாகவும், 23.09.2021ஆம் திகதி நடைபெற்ற எமது சபைக்கூட்டத்தில் இது விடயம் தொடர்பாக ஆராயப்பட்டு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் குறித்த பிரச்சனைக்கு பின்வரும் தீர்வு வழங்கப்படுகின்றது என்பதனை அறியத்தருகிறேன்.

மைதானத்தின் அளவு குறைவாக காணப்படுவதனால் மைதானத்தின் மத்தியில் கடினபந்து விளையாடுவதை தற்காலிகமாக இடைநிறுத்தும்படி தெரிவிப்பதுடன் வலைக் கூட்டுக்குள் பயிற்சியில் ஈடுபடலாம் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன். என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கடிதத்தின் பிரதிகள், உள்ளூராட்சி ஆணையாளர் கிழக்கு மாகாணம், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மட்டக்களப்பு, பிரதேச செயலாளர், மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி, ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயபரிபாலன சபை, கல்லாறு, விளையாட்டு உத்தியோகத்தர் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகம், அபிவிருத்தி உத்தியோகத்தர் (இந்து கலாச்சாரம்), மண்முனை தென் எருவில் பற்று,  .புவனேந்திரராசா, பொது மைதான வீதி, கல்லாறு ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுக் கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் தாம் இந்த மைதானத்தில் மிக நீண்டகாலமாகவிருந்து  கடினபந்து விளையாடி வருவதை தற்போது தடைசெய்யப்பட்டுள்ளமை தமக்கு மிகுந்த வேதனையளிப்பதாகவும், இது தமது விளையாட்டின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக அமைந்துள்ளதாகவும், பெறியகல்லாறு கிராமத்தில் அமைந்துள்ள விளையாட்டுக் கழகத்தினர் தெரிவிக்கின்றனர்.



SHARE

Author: verified_user

0 Comments: