23 Oct 2021

காட்டு யானை தாக்கி மாடுமேய்ப்பவர் பலி.

SHARE

காட்டு யானை தாக்கி மாடுமேய்ப்பவர் பலி.

ஏறாவூர் பொலிஸ் பிரிவின் பதுளை வீதியை அண்டிய பகுதிக்குள் உள் நுழைந்த காட்டு யானையால்  மாடு மேய்ப்பவரான வயோதிபர் ஒருவர் தாக்கப்பட்டு ஸ்தலத்திலேய உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வியாழக்கிழமை 21.10.2021 மாலை 4 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் மட்டக்கள்ப்பு பதுளை வீதியை அண்டியுள்ள கொடுவாமடு கிராமம் காளிகோயில் வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான மூத்ததம்பி காளிக்குட்டி (வயது 64) என்பவரே உயிழந்துள்ளார்.

மாடு மேய்ப்பவரான இவர் வழமைபோன்று தனது மாடுகளைத் தேடி செங்கலடி கறுப்புப் பாலத்தை அண்டியுள்ள பகுதிக்குச் சென்றபோது பற்றைக் காடுகளுக்குள் மறைந்திருந்த காட்டு யானையால்  மூர்க்கமாகத் தாக்கப்பட்டு ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது பற்றி பொலிஸாருக்குத் தகவல் அறிவிக்கப்பட்டதும் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் கான்ஸ்டபிள் பெரியாண்டி அமரேசன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் ஸ்தலத்திற்குச் சென்று சடலத்தை மீட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளையும் நடத்தி வருகின்றனர்.

சடலம் உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



SHARE

Author: verified_user

0 Comments: