இவ்வருட இறுதிக்கள் நவகிரி நகர் விளையாட்டு மைதானம் புணரமைப்பு செய்யது தரப்படும்.
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்கு புதன்கிழமை(29) மாலை விஜயம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களை நவகிரி நகர் கிராமத்தில் அமைந்துள்ள விளையாட்டுக் கழகத்தினர் அழைத்து தமது மைதானத்தின் நிலமைகுறித்து எடுத்துக் காட்டியுள்ளனர்.விளையாட்டுக் கழகத்தினர் முறையாக விளையாடுவதற்குரிய இந்த மைதானத்தை புணரமைப்பு செய்து தருமாறு இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்தார்.
குறித்த மைதானத்தைப் பார்வையிட்ட அவர் இவ்வருட இறுதிக்குள் இந்த மைதானத்தை புணரமைப்பு செய்து தருவதாக இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் விளையாட்டுக் கழகத்தினரிடம் உறுதியளித்தார்.
0 Comments:
Post a Comment