களுமுந்தன்வெளியில் விவசாயிகளுக்கு இலவசமாக பயிர்விதைகள் வழங்கி வைப்பு.
மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின்கீழ் பழுகாமம் விரிவாக்கல் பிரிவின் போதனாசிரியர் பரமேஸ்வரன் சகாப்தனின் ஒழுங்கமைப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பயிர் மாற்றுத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிலக்கடலை மற்றும் கௌபி விதைகள் இலவசமாக வழங்கி வைக்கும் நிகழ்வு, சனிக்கிழமை(30) களுமுந்தன்வெளி கிராமத்தில் இடம்பெற்றது.
இதன்போது மட்டக்களப்பு மாவாட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன், மாவட்ட பிராந்திய பணிப்பாளர் நாகரெத்தினம், மட்டக்களப்பு மாவட்ட விவசாயப் பிரதிப் பணிப்பாளர் வி.பேரின்பராஜா, போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி, நவகிரிப் பிரிவு நீர்ப்பாசனப் பொறியியலாளர் திருமதி.கீதா அருண், உதவி விவசாயப் பணிப்பாளர் ரி.மேகராசா, பாடவிதான உத்தியோகஸ்த்தர் என்.லக்ஸ்மன், மற்றும், விவசாயப் போதனாசிரியர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலரும், அதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பி.ஈ.ஐ.எஸ்.ஈ.ஐ.பி. திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டின்கீழ் 50 இற்கு மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் அப்பகுதியைச் சேர்ந்த 100 இற்கு மேற்பட்ட விவசாயிகள் நன்மையடைகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment