31 Oct 2021

ரோட்டரி கழகத்தின் சார்பில் காலத்தின் தேவை பூர்த்தி செய்யப் பட்டது.

SHARE

ரோட்டரி கழகத்தின் சார்பில் காலத்தின் தேவை பூர்த்தி செய்யப் பட்டது.

திருகோணமலை ரோட்டரி கழகத்தின் சார்பில், சனிக்கிழமை (30) திருகோணமலை ரோட்டரி கழகத்தின் தலைவர் .அகிலனின் வேண்டுகோளின்படி, ரோட்டரி கழக உறுப்பினர்களால்    திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சேருவல பிரதேசத்தின் உப்பூரல் மற்றும் சீனன்வெளி  கிராமங்களில் உள்ள 14 வயதிட்கு உட்படட சிறுவர் சிறுமிகளுக்கு, ஒருவருக்கு தலா 2 பால் மா பாக்கெட்டுகள், சீனி, பிஸ்கட்டுகள் அடங்கிய 70 பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

ரோட்டரி கழக உறுப்பினர்களான செயலாளர் பிரபாகரன், அடுத்த தலைவர் கிருட்ணதாஸ் Rotary Foundation Chairman ரகுராம் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பாடசாலை அதிபர்கள், பொதுமக்கள் என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இதற்குரிய நிதி வசதியை லண்டனில் வசிக்கும்  பாலா கனகசபை அவர்களாலும் கனடாவை சார்ந்த ஆனந்தன் தர்மா அவர்களாலும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.








SHARE

Author: verified_user

0 Comments: