28 Oct 2021

பட்டிருப்பு கல்வி வலயத்தின் கீழ் உள்ள பாடசாலைகளுக்கு கையேடு வழங்கிவைப்பு.

SHARE

பட்டிருப்பு கல்வி வலயத்தின் கீழ் உள்ள பாடசாலைகளுக்கு கையேடு வழங்கிவைப்பு.

மட்டக்களப்பு மாவட்டம்   எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தினால்  பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் க.பொ .த உயர் தர  பரீட்சையில் வரலாறு பாடத்துக்கு தோற்றும் மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் கையேடு வழங்கி வைக்கும் நிகழ்வு அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும் சமூகசேவகருமான அ.வசிகரன் ஒழுங்கமைப்பில்  செவ்வாய்கிழமை (26)  இடம்பெற்றது

இதன்போது எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியம்   நாற்பதாயிரம்  ரூபா நிதி பங்களிப்பில்  இவ்உதவி வழங்கிவைக்கப்பட்டது

 இந்நிகழ்வில் பட்டிருப்பு கல்வி வலயத்தின் நிருவாக பிரிவுக்கு பொறுப்பான பிரதிக்கல்வி பணிப்பாளர் எஸ் .மகேந்திரகுமார்

உதவிக் கல்விப்பணிப்பாளர் சுரேஸ், அமைப்பின் தலைவர் அ.வசிகரன் செயலாளர் இ.ஜீவராஜ் மற்றும் ஆசிரிய வள நிலைய முகாமையாளர், ஆசிரிய ஆலோசகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





 

SHARE

Author: verified_user

0 Comments: