மட்.களுதாவளை மாகாவித்தியாலயம் தேசிய பாடசாலை உயர்தர மாணவர்களுக்கு சைஸர் தடுப்பூசி ஏற்றல்.
உயர்தர வகுப்புக்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளை மகாவித்தியாலயம் தேசிய பாடசாலையில் பயிலும் உயர்தர மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை வெள்ளிக்கிழமை(22) மேற்படி பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது 174 மாணவர்களுக்கு இதன்போது தடுப்பூசி ஏற்றப்படுவதாக களுதாவளை மகாவித்தியாலயம் தேசிய பாடசாலையின் அதிபர் க.சத்தியமோகன் தெரிவித்தார்.
சிரேஸ்ட்ட பொதுச்சுகாதர பரிசோரகர் யோகேஸ்வரன், மற்றும் ஏனைய பொதுசுகாதர பரிசோதகர்கள், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டு மாணவர்களுக்கு தடுப்பூசியை ஏற்றினர்.
0 Comments:
Post a Comment