உற்பத்தி துறையில் நாங்கள் இன்னும் புரட்சியைமேற்கொள்ளவிலலை – சந்திரகாந்தன் எம்.பி
மட்டக்களப்பு பெரியதொரு மாட்டம் 2 இலெட்சம் வயல் செய்கை பண்ணப்படுபகின்றது 120கிலோ மீற்றர் கடல்வளம் உள்ளது, பெரிய குளங்கள், ஆறு உள்ளன, ஆயிரக்கணக்கானோர் வெளிநாடுகளில் உழைக்கின்ற போதிலும் நாங்கள் உற்பத்தித்துறையில் புரட்சி செய்யவில்லை மக்கள் தங்களுடைய சிந்தனை ரீதியான செயலை செய்வதற்கு மறுக்கிறார்கள் அதுதான் அதற்கு காரணம்.
என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சாந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
ஒரு லெட்சம் கிராமிய வீதிகள் புணரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் 52 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தின் 2 இலோ மீற்றர் நவகிரி நகர் பிரதான வீதிக்கான அபிவிருத்தி வேலைத்திட்டம் புதன்கிழமை(29) மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது இதன்போது கலந்து கொண்டு வீதி அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்துவிட்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பொறியலாளர் வரதன், போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன், உள்ளிட்டபலர் கலந்து கொண்டிருதனர். இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்…
ஜனாதிபதி கோட்டபாஜ ரஜபக்ஸ அவர்கள் தேர்தல் விஞ்ஞாபனத்திலே; குறிப்பிட்ட விடையம் ஒரு லெட்சம் வீதிஅபிவிருத்தி, ஓருலெட்சம் காணித்துண்டுகள் வழங்குதல், ஒருலெட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு 1000 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவது, உள்ளிட்ட விடையங்களை முன்வைத்துதான் அவர் இந்த நாட்டைப் பொறுப்பெற்றார். எனினும் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக அனைத்து விடையங்களும், மிகவும் மெதுவாக நகர்த்தப்படுவதற்குரிய சூழலில் நாடும், உலகமும் சென்று கொண்டிருக்கின்றோம். எனினும் இதனையும் சமாளித்துக் கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல வீதிகளை அபிவிருத்தி செய்து கொண்டிருக்கின்றோம்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அரசாங்கத்தின் பங்குதார் என்ற அடிப்படையில் எமக்குரிய ஒதுக்கீடுகளுடன் அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்றுக் கொண்டு வருகின்றன. இருந்தாலும் இன்னும் பல மேம்படுத்தவேண்டிய விடையங்கள் உள்ளன. 2025 ஆம் ஆண்டளவில் பெரும்பாலான வீதிக் கட்டமைப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்போம். எமக்கு வாக்களித்தன் பலனை மக்கள் நிற்சயம் அனுபவிப்பார்கள். நாம் பட்டறிவிலும், ஜனார்த்த வாதி என்ற அடிப்படையிலும், சொல்லக் கூடிய விடையங்களை செய்து முடிப்பதுவும், செய்யக்கூடிய விடையங்களை சொல்வதுவும், உள்ளளோம். சிலர் காலத்திற்கு ஏற்ப கதைப்பவர்களும், உள்ளார்கள்.
சாணக்கியன் எங்களோடு வந்து இணைந்திருந்தார். அதிலே அவர் எதிர்பார்த்த விடையஙம் நடைபெறவிலலை என்பதால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குச் சென்றுள்ளார். ஆனால் அவர் முன்பெல்லாம் அவருடைய பௌண்டேசன் மூலம் கொப்பி புத்தகம் கொடுத்தார் அவர் நாடாளுமன்ற உறுப்பினரானதும் அவர் ஒன்றும் செய்வதைக் காணவில்லை. அவருடை நோக்கம் எம்.பி. ஆவது மட்டும்தான். அவருடைய நோக்கம் எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைப் பாதிப்படையச் செய்வதாகும்.
மற்றவரைப் பிழை பிடிக்கும் வேலைகளை நாம் செய்யாமல் அபிவிருத்தி வேலைகளை மக்களுக்குச் செய்யவேண்டும். உணர்ச்சிவசமூட்டுகின்ற மக்கள் கூட்டத்தை நாங்கள் உருவாக்க முடியாது. தங்களுடைய குடும்ப பொருளாதாரத்தை பாதுகாத்து, கிராமம் முதல் தேசியம் வரைச் சிந்திக்கின்ற மக்களை உருவாக்குவதற்கு நாங்கள் பாடுபடல் வேண்டும். ஆனாலும் எமது மொழி, காலாசாரம், பாரம்பரியத்தை நாங்கள் காப்பாற்ற வேண்டும். அதனை நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம்.
நாங்கள் 10 வருடத்தில் எழுற்சி பெற்றிருக்கின்ற கட்சி, அடுத்த
10 வருடத்தில் கிழக்கு மாகாணத்தை தீர்மானிக்கின் கட்சி, அடுத்த 10 வருடத்தில் இலங்கையில் ஒரு பிரபலமான கட்சியாக மாற்றுவதற்கு நாங்கள் எல்லோரும் பாடுபடல் வேண்டும். நாங்கள் பட்டதுயரங்கள், வேதனைகளை எமது குழந்தைகள் அனுபவிக்க விடக்கூடாது. அறிவு பூர்வமாக சிந்தித்து செயற்படல் வேண்டும்.
எவ்வளவுதான் வர்த்தகத்தைக் கற்பித்தாலும், மட்டக்களப்பில் இறக்குமதியும் இல்லை, ஏற்றுமதியும் இல்லாமலுள்ளது. ஆனால் அடவு பிடக்கும் கடைகள் அதிகமாகவுள்ளது. மட்டக்களப்பு பெரியதொரு மாட்டம் 2 இலெட்சம் வயல் செய்கை பண்ணப்படுபகின்றது 120 கிலோ மீற்றர் கடல் வளம் உள்ளது, பெரிய குளங்கள், ஆறு உள்ளன, ஆயிரக்கணக்கானோர் வெளிநாடுகளில் உழைக்கின்ற போதிலும் நாங்கள் உற்பத்தித்துறையில் புரட்சி செய்யவில்லை மக்கள் தங்களுடைய சிந்தனை ரீதியான செயலை செய்வதற்கு மறுக்கிறார்கள் அதுதான் அதற்கு காரணம். மட்டக்களப்பு மாவட்டதில் சுமார் 50 ஆயிரம் அரச உத்தியோகஸ்த்தர்கள் உள்ளார்கள். ஆனால் மக்கள் இன்னும் பல குறைபாடுளைத்தான் சொல்கின்றார்கள். எனவே நாம் அரச துறையையும், தனி நபர்களையும் மேம்படுத்தவில்லை. பிறர் கொண்டு தருவார்கள் என்பதை விட நாங்களே உழைத்து வாழக்கூடிய புரட்சியையும், அபிவிருத்தியையும், ஏற்படுத்த வேண்டும் அதற்குரிய எண்ணங்களை மக்கள் மாற்றவேண்டும் என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment