28 Oct 2021

மட்டு.கல்முனை வீதியில் பாரிய விபத்து6 வாகனங்கள் பெரும் சேதம்.

SHARE

மட்டு.கல்முனை வீதியில் பாரிய விபத்து6 வாகனங்கள் பெரும் சேதம்.

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி பொலிஸ் பிரலிவிலுள்ள காத்தான்குடி பிரதான வீதியில் செவ்வாய்கிழமை(26) நண்பகல் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒரு லொறி உட்பட ஒரு முச்சக்கர வண்டி, நான்கு மோட்டார் சைக்கிள்கள் என்பன சேதமடைந்துள்ளன.

மட்டக்களப்பிலிருந்து வந்த சிறிய லொறியொன்று காத்தான்குடி மட்டக்களப்பு பிரதான வீதியிலுள்ள எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மற்றும் நான்கு மோட்டார் சைக்கிள் என்பவற்றுடன் மோதியுள்ளது.
இதில் குறித்த லொறி உட்பட முச்சக்கர வண்டி என்பன சேதமடைந்துள்ளதுடன் மோட்டார நான்கு மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளன.

குறித்த லொறி முச்சக்கர வண்டியில் மோதுண்டதுள்ளதுடன் அவ்விடத்திலுள்ள மர ஆலையொன்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. அவ்விடத்திலுள்ள வீதி ஓரத்தில் நின்ற மரமொன்றுடனும் இந்த லொறி மோதியதில் மரத்துக்கும் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது.

எனினும் இச்சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லையென காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த காத்தான்குடி பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிசார் விசாரணைகளை மேற் கொண்டதுடன் வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

 









SHARE

Author: verified_user

0 Comments: