இயந்திரத்தைப் பயன்படுத்தி கூட்டெரு தயாரிக்கும் விழப்புணர்வு.
அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின்கீழ் இயந்திரத்தைப் பயன்படுத்தி கூட்டெரு தயாரிக்கும் செயற்பாடுகள் மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும், முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அதன் மற்றுமொரு செயற்பாடு வெள்ளிக்கிழமை(24) மட்டக்களப்பு மவாட்டத்தின் அம்பிளாந்துறை விவசாயிகளுக்கு இயந்திரத்தைப் பயன்படுத்தி கூட்டெரு தயாரிக்கும் விழிப்புணர்வுச் செயற்பாடொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது இயற்கையாகவே கிடைக்கும் இலை குழைக்கள், சல்வீனியா, கிளிசறியா, மாட்டெரு போன்ற பலவற்றைப் பயன்படுத்தி இயந்திரத்தைக் கொண்டு கூட்டெரு தயாரிக்கும் முறை விவசாயிகளின் முன்னிலையில் தயாரித்துக் காண்பிக்கப்பட்டன.
கடுக்காமுனை விவசாயப் போதனாசிரியர் என்.பார்தீபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தட்சணகௌரி, மற்றும் ஏனை விவசாயப் போதனாசிரியர்களும் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பயிற்சிகளையும், விளக்கங்களையும், வழங்கி வைத்தனர்.
0 Comments:
Post a Comment