பருவ மழை பெய்ததையடுத்து பெரும்போக வேளாண்மைச் செய்கை ஆரம்ப வேலைகள் முன்னெடுப்பு.
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைபுறக் கிராமங்களில் தற்போது பருவ மழை பெய்யத் துவங்கியுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் பெரும்போக வேளாண்மைச் செய்கைக்குரிய ஆரம்ப வேளாண்மைச் செய்கைக்குரிய வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பிரதேசமான பிரதேசத்தின் 25 ஆம் கொலனி, பூச்சிக்கூடு, கத்தூண்வட்டை, றாணமடு, மாலையர்கட்டு, சின்னவத்தை, ஆனையட்டியவெளி, உள்ளிட்ட பல பகுதிகளில் தற்போது மாலை வேளைகளில் மழை பெய்து வருவதனால் அப்பகுதியில் அமைந்துள்ள வயற்கண்டங்களில் பெரும்போக வேளாண்மைச் செய்வதற்குரிய ஆரம்ப வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment