24 Sept 2021

களுதாவளையில் அமைந்துள்ள விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஸ விஜயம்.

SHARE

களுதாவளையில் அமைந்துள்ள விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஸ விஜயம்.

மட்டக்களப்பு மாவட்டடம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தின் களுதாவளையில் அமைக்கப்பட்டுள்ள விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்  அமைச்சர் நாமல் ராஜபக்ஸ வியாழக்கிழமை (23) மாலை விஜயம் செய்து அதன் தற்போதைய நிலமை தொடர்பில் அவதானித்துள்ளார்.

கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 300 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் நிருமாணிக்கப்பட்டு 4 வருடங்கள் கழிந்த நிலையிலும் இம்மத்திய நிலையம் இதுவரையில் மக்கள் பாவனைக்கு விடப்படாமலுள்ளது. இதனை திறந்து வைப்பது தொடர்பில் அமைச்சர் நேரில் விஜயம் செய்து மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், மற்றும், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் ஆகியோரிடம் கேட்டறிந்துள்ளார்.

இந்நிலையில் களுதாவளையில்  அமைந்துள்ள விசேட பொருளாதார மத்திய நிலையத்தை வெகுவிரைவில் திறந்து வைப்பதற்குரிய நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அமைச்சர் நாமல் ராஜபக்ஸ அதிகாரிகளுக்கு  உத்தரவிட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார் தெரிவித்தார். 

இதன்போது அங்கு வருகை தந்திருந்த மக்கள் அமைச்சரிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய விண்ணப்பங்களையும் வழங்கி வைத்தனர்.

இவ்விஜயத்தின்போது இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியேழேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன், உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.











SHARE

Author: verified_user

0 Comments: