மட்டக்களப்பு இளைஞர்களை கொழும்புக்கு அழைத்துச் செல்ல வழிசெய்யப்படும் - அமைச்சர் நாமல் ராஜபக்ஸ.
கோட்டைக்கல்லாறு மைதானத்தைப் புணரமைப்புச் செய்வதற்கு எதிர்காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்தக் கிராமத்திலும், மட்டக்களப்பு மாவட்டதிலும் சிறப்பான விளையாட்டு வீரர்கள் இருக்கின்றார்கள். சிறந்த கிறிக்கட், வீரர்கள் இருக்கின்றார்கள்.
என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கிராமிய விளையாட்டு மைதானங்களை மேம்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை மைச்சின் 1.5 நிதி ஒதுக்கீட்டின் கீழ் புணரமைக்கப்பட்ட கோட்டைக்கல்லாறு கிழக்கு பொது விளையாட்டு மைதானம் வியாழக்கிழமை(23) திறந்து வைக்கப்பட்டது இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கiயில்…
கடந்த காலங்களில் பல வீரர்களை கொழும்புக்கு அழைத்திருந்தோம். சிலர் கொழும்பில் இருக்க முடியாது என திரும்பி வந்து விட்டார்கள். எதிர்காலத்திலே இக்கிராமத்திலுள்ள இளைஞர்கள் விளையாட்டுக்களைப் பழக்கி கொழும்புக் அழைத்துச் செல்வதற்குரிய வழிமுறைகளை உருவாக்குவோம். சிறந்த வீரர்கள் இங்கு இருக்கின்றார்கள். கடற்கரை வொலிவோள் விளையாட்டை இக்பிரதேசத்தில் அறிமுகப்படுத்தி பிரபல்ப்படுத்துவதற்கு நான் எதிர்பார்க்கின்றேன். எதிர்காலத்தில் ஒலிம்பிக் பதக்கத்தை வெல்லக்கூடிய கடற்கரை வொலிவோள் விளையாட்டை வெல்லலாம் என நினைக்கின்றேன். அப்போது மட்டக்களப்பைச் சேர்ந்த இளைஞர்களும் அதில் இணைந்திரப்பார்கள் என நான் நினைக்கின்றேன். அந்த சந்தர்பத்தை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியேழேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், பொதுமக்கள், உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment