21 Sept 2021

அன்றாடம் காய்ச்சிகளுக்கு அணுசரணையில் களுவாஞ்சிகுடி நலன்புரிசங்கத்தால் உதவி வழங்கி வைப்பு.

SHARE

அன்றாடம் காய்ச்சிகளுக்கு அணுசரணையில் களுவாஞ்சிகுடி நலன்புரிசங்கத்தால் உதவி வழங்கி வைப்பு.

கொவிட் - 19 ஆல் தற்போது முழு நாடும் முடக்கப்பட்டுள்ள நிலையில் அன்றாடம் காய்ச்சிகள் தமது வருமானத்தை இழந்து நிற்பதாகக் கவலை தெரிவிக்கின்றனர். இந்நிலையில அவ்வாறானவர்களின் நிலமையை அறிந்து ஆங்காங்கே சில தனவந்தர்களும், சமூக சேவையாளர்களும், தம்மாலான உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் பிரித்தானியாவில் இயங்கி வரும் களுவாஞ்சிகுடி நலன்புரி தாய்சங்கத்தின் அணுசரணையில் களுவாஞ்சிகுடி நலன்புரிசங்க கிளையால் ஒரு தொகுதி உலர் உயவுப் பொருட்கள் ஞாயிற்றுக்கிழமை(20) காலை வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன்போது தாய் சங்க உறுப்பினர் குலேசேகரம்பிள்ளை குலந்திரன் அவர்கள் கலந்து கொண்டு இப்பாருட்களை வழங்கி வைத்தார்.

அரிசி, சீனி, பரும்பு, கொதுமை மா, தேயிலை, உள்ளிட்ட உணவுப்பொருட்கள் களுவாஞ்சிகுடி பகுதியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 200 குடும்பங்களுக்கு இதன்போது வழங்கி வைக்கப்பட்டன. தமது நிலமையை அறிந்து தாமாகவே முன்வந்து உதவிய களுவாஞ்சிகுடி நலம்புரிச் சங்கத்திற்கு பயனாளிகள் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.











SHARE

Author: verified_user

0 Comments: