ஊரடங்குக்கு மத்தியிலும் மட்டக்களப்பில் தபாலகங்கள் ஊடாக ஓய்வூதியம், முதியோர் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.
தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்த ஊரடங்குச் சட்டத்திற்கு மத்தியிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் அலுவலகங்கள் புதன்கிழமை(01) திறக்கப்பட்டிருந்தன.
மட்டக்களப்பு பிரதான தபால் நிலையத்தின் கீழள்ள சகல தபால் மற்றும் உப தபால்
அலுவலகங்களிலும் புதன்கிழமை(01) ஓய்வுதிய
கொடுப்பனவுகள் மற்றும் முதியோர் கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டதுடன் நோயாளர்களுக்கான
வைத்தியசாலை கிளினிக் மருந்துப் பொருட்களும் வினியோகிக்கப்பட்டதாக பிரதம தபால் அதிபர்
எஸ்.சுகுமார் தெரிவித்தார்.
இதேவேளை மாவட்டத்தின் சகலதபால் அவலகங்களும் திறக்கப்பட்டு ஓய்வூதியக் கொடுப்பனவுகள்
வழங்கப்பட்டன. ஓய்வூதியம் பெறுவோரும் ஏனையோரும் சுகாதார நடைமுறைகளைப் பேணி தபாலகம்
வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment