கடலில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட சுருக்குவலை உள்ளிட்டு பொருட்கள் மீட்பு.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது….
தமக்கு கிடைத்த தகவலையடுத்து புதுக்குடியிருப்பு கடற்படையினருடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின்போது கடலில் சட்டவிரோதமான முறையில் மீன் பிடிப்பதற்கு
கடலில் பதுக்கி வைத்திருந்த 2 சுருக்குவலைகள், ஒரு எஞ்சின், ஒரு வோர்ட், டோச் லைட், வெற்றி, உள்ளிட்ட சுமார் 15 லெட்சம் ரூபா மதிப்பீட்டிலான பொருட்கள் என்பன தேத்தாதீவு,
மற்றும் களுதாவளைக் கடற் பகுதியிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைப்பற்றப்பட்டு பொருட்கள் யாவும் களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்றில் ஒப்படைப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்றொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ருக்சான் குரூஸ் தெரிவித்தார். மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment