24 Sept 2021

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 230 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு.

SHARE

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 230 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு.

கொவிட் 19 தாக்கத்தால் அமுலிலுள்ள நடமாட்டத்தடை காரணமாக தினமும்; கூலி வேலைசெய்து அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் குடும்பங்களைப் பாதுகாத்துவரும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட பெரியகல்லாறு கிராமத்தைச் சேர்ந்த மீனவ குடும்பங்கள் உள்ளிட்ட 230 குடும்பங்களுக்கும், புதன்கிழமை(22) அரிசி, மற்றும் மரக்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினரும், சமூக சேவையாளருமான மேகசுந்தரம் வினோராஜ் அவர்களின் சொந்த நிதியில் இருந்து இந்த உலர் உணவுப் பொருட்களை அவர் வழங்கி வைத்துள்ளார்.

கொரோனா அச்சத்தின் காரமாக மக்கள் வருமானமின்றி   இன்னலுறும்போது எமது நிலமை அறிந்து தாமாக முன்வந்து மனமுவந்த காலடிக்கே கொண்டுவந்து உலர் உணவுப் பொருட்களை வழங்கிய மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் மே.வினோராஜ் அவர்களுக்கு அப்பகுதி மக்கள் நன்றிளைத் தெரிவித்துள்ளனர்.







SHARE

Author: verified_user

0 Comments: