9 Aug 2021

மட்டக்களப்பு வாவியில் நீந்தும் இரண்டு காட்டு யானைகள்

SHARE

மட்டக்களப்பு வாவியில் நீந்தும் இரண்டு காட்டு யானைகள்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்குப் பக்கமாக அமைந்துள்ள படுவாங்கரைப் பகுதியில் காட்டுயானைகளின் அட்டகாசங்களும், தொல்லைகளும் தொடர்கதையான ஒன்றாகிவிட்டது எனலாம். இந்நிலையில் சனிக்கிழமை(7) இவ்வாறு படுவாங்கரைப் பகுதியிலிருந்து மட்டக்களப்பு வாவியின் பட்டிருப்பு பகுதி ஊடகாக நீந்திக்கொண்டு எழுவாங்கரைப் பகுதிக்கு வருவதற்கு இரண்டு காட்டுயானைகள் முயற்சி செய்துள்ளதை மக்கள் நேரடியாகவே அவதானித்துள்ளனர்.

எனினும் அவ்விரு காட்டு யானைகளிதும் முயற்சி பலனளிக்காத நிலையில் வாவிப் பகுதியில் அமைந்துள்ள பற்றைக் காட்டுப்பகுதியில் தரித்து நிற்பதாக அதனை நேரில் அவதானித்த பொதுமக்களும், மீனவர்களும் தெரிவிக்கின்றனர்.

இதுவரைகாலமும் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பகுதியை துவம்சம் செய்து வந்த காட்டு யானைகள் இனிமேல் எழுவாங்கரைப் பகுதியையும் தாக்கிடுமோ என்ற அச்சம் அப்பகுதி மக்களிடத்தில் நிலவுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். 










SHARE

Author: verified_user

0 Comments: