சுபீட்சத்தின் நோக்கு வேலைத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு சேதனப் பசளை உற்பத்தி தொடர்பில் தெளிவூட்டும் பயிற்சி.
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு சேதனப் பசளை உற்பத்தியை மேற்கொள்வதற்கான தெளிவூட்டல் பயிற்சி மட்டக்களப்பு மாவட்டம் பழுகாமம் விவசாய விரிவாக்கல் பிரிவிற்குட்பட்ட களுமுந்தன்வெளிக் கிராமத்தில் வெள்ளிக்கிழமை(30) இடம்பெற்றது.
பழுகாமம் பிரதேசத்தின் விவசாயப் போதனாசிரியர் பரமேஸ்வரன் சகாப்தனின் ஏற்பாட்டில் இந்நிகழ்வில் மட்டக்களப்பு தெற்கு வலயம் உதவி விவசாயப் பணிப்பாளர் ரீ.மேகராசா, விவசாயப் போதனாசிரியர்கள், கமநல சேவைகள் நிலைய உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இன் நிகழ்வில் விவசாயப் போதனாசிரியர்களால் அங்கு வருகைதந்த விவசாயிகளுக்கு சேதனப் பசளை உற்பத்தி தொடர்பில் விளக்கங்களையும், செயன்முறை செய்முறைப் பயிற்சியையும வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment