9 Aug 2021

காட்டு யானைத் தாக்கத்தினால் மரவெள்ளித் தோட்டம் நாசம்.

SHARE

காட்டு யானைத் தாக்கத்தினால் மரவெள்ளித் தோட்டம் நாசம்.

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தின் எல்லைப்புறக் கிராமமான கண்ணபுரம் கிழக்கு கிராமத்தில் சனிக்கிழமை(07) இரவு புகுந்த காட்டுயானை அக்கிராமத்தில் செய்கை பண்ணப்பட்டிருந்த மரவெள்ளித் தோட்டடங்களை அழித்துத் துவம்சம் செய்துவிட்டுச் சென்றுள்ளதாக அக்கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.

சனிக்கிழமை(07) நள்ளிரவு வேளையில் புகுந்த காட்டுயானை ஞாயிற்றுக்கிழமை(08) காலை 6 மணியளவில்தான் கிராமத்தை விட்டு நகர்ந்தள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானை அங்குள்ள மக்கள் தமது வாழ்வாதாரத்திற்காக மேற்கொள்ளப்பட்டிருந்த மரவெள்ளி, தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களை பிடுங்கி அழித்து துவம்சம் செய்துவிட்டுச் சென்றுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக தமது கிராமத்தில் தொடர்ந்து காட்டுயானைகளின் தொல்லைகளும், அட்டகாசங்களும், அழிவுகளும், இடம்பெற்று வருவதாகவும், இது தொடர்பில் தாம் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றாலும், அதுபற்றி இன்னும் தமக்குரிய தீர்க்கமான தீர்வு கிடைக்கவில்லை எனவும் அங்குள்ள மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து காட்டு யானைகளின் தொல்லையிலிருந்து பாதுகாப்பதற்கு யானைப் பாதுகாப்பு வேலி அமைத்துத் தரவேண்டும் என அங்குள்ள மக்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்க
ரைப்
பகுதியில் மிக நீண்டகாலமாகவிருந்து காட்டுயானைகளின் அட்காசங்களும், தொல்லைகளும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.





SHARE

Author: verified_user

0 Comments: