5 Aug 2021

கடமை முடித்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய பெண் ஒருவரை வழி மறித்து தாலி கொடியை அறுத்து எடுத்து தப்பி ஓட்டம். துறைநீலவணையில் சம்பவம்.

SHARE

கடமை முடித்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய பெண் ஒருவரை வழி மறித்து தாலி கொடியை அறுத்து  எடுத்து தப்பி ஓட்டம். துறைநீலவணையில் சம்பவம்.

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் கடமையாறிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடுதிரும்பிய பெண் ஒருவரை மோட்டார் சைக்கிளில் காத்துநின்ற இருவர் குறித்த பெண்ணை வழிமறித்து மோட்டர் சைக்கிளில் இருந்து தள்ளிவிட்டு விட்டு அவரது கழுத்தில் இருந்த 6 அரைப்பவுண் தாலிக் கொடியை அறுத்துச் சென்ற சம்பவம்  களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிலுள்ள துறைநீலாவணைக்கு செல்லும் பிரதான வீதியில் வியாழக்கிழமை (05) மாலை இடம்பெற்றுள்ளதாக  பொலிசார் தெரிவித்தனர்.

துறைநீலாவனையை வசிப்பிடமாக கொண்ட குறித்த பெண் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றிவரும் நிலையில் சம்பவதினமான வியாழக்கிழமை மாலை கடமையை முடித்துக் கொண்டு காரியாலத்தில் இருந்து தனியாக வீட்டிற்கு மோட்டர்சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தபோது மாலை சுமார் 5.10 மணியளவில் துறைநீலாவணை பிரதான வீதியில் பல்சர் ரக கறுப்பு மோட்டார் சைக்கிளில் காத்திருந்த இருவர் மோட்டர்சைக்கிளில் பிரயாணித்த அவரை வழிமறித்தபோது அவர் மோட்டார்சைக்கிளை நிறுத்தியுள்ளார்.

அதனை தொடர்ந்து கொள்ளையர்கள் அவரை மோட்டர்சைக்கிளில் இருந்து தள்ளிவிட்டு அவரின் கழுத்தில் இருந்த 6 அரை பவுண் கொண்ட தாலிக் கொடியை அறுத்து விட்டு பாதனிகளை கைவிட்டு எடுத்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.

இதனையடுத்து அவர் சத்தமிட்டபோது அருகில் இருந்தவர்கள் உடனடியாக சென்று அவரை காப்பாற்றியதுடன் அவரின் கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளதுடன் மோட்டர்சைக்கிளும் சேதமடைந்துள்ளதுடன்  சம்பவ இடத்துக்கு சென்ற கல்முனை  பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.









SHARE

Author: verified_user

0 Comments: