மாகாண பயணத்தடை நீக்கம்-இரண்டரை மாதங்களின் பின்னர் மட்டக்களப்பிலிருந்து தூர இட போக்குவரத்து ஆரம்பம்.
மாகாணங்ளுக்கிடையிலான பயணத்தடை நீக்கப்பட்டதையடுத்து கிழக்கு மாகாணத்திலிருந்து தூர இடங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவைகள் ஞாயிற்றுக்கிழமை (01) ஆரம்பமாகின.
மட்டக்களப்பு பிரதான பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை யாழ்ப்பாணம் , பதுளை, மன்னார், கொழும்பு, ஆகிய இடங்களுக்கான பஸ் சேவைகன் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை மட்டக்களப்பு டிப்போ முகாமையாளர் தெரிவித்தார்.
பயணிகள் அனைவரும் கொரோனா சுகாதார நடை முறைகளைப் பேணி பயணத்தை
மேற்கொண்டனர். கைகளைச் சுத்தம் செய்து,முகக்கவசம் அணிந்து,சமுக இடை வெளிகளைப் பேணி போரூந்துகளில்
பயணிகள் பயணித்ததை அவதானிக்க முடிந்தது.
0 Comments:
Post a Comment