4 Aug 2021

காட்டு யானை கிராமத்திற்குள் புகுந்து துவம்சம்.

SHARE

காட்டு யானை கிராமத்திற்குள் புகுந்து துவம்சம்.

மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரைப் பகுதியில் அமைந்துள்ள போரதீவுப் பற்றுப் பிரதேசத்தின் எல்லைக் கிராமமான பாலையடிவட்டை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(01) இரவு புகுந்த காட்டுயானை அங்கிருந்த பயன்தரும் பல மரங்களை அழித்து விட்டுச் சென்றுள்ளதாக கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர்.

அப்பகுதியில் மாலை லேளையானதும் தொடற்சியாக காட்டுயானைகளின் தொல்லைகளும், அட்டகாசங்களும் அதிகரித்து வருகின்றன. இவ்வாறு ஞாயிற்றுக்கிழமை கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானையால் அப்பகுதி மக்கள் பெரும் அல்லோல கல்லோலப் பட்டுள்ளனர்.

திடீரென மக்கள் குடியிருப்புக்குள் புகுந்த காட்டுயானையை மக்கள் ஒன்றிணைந்த துரத்துவதற்கு முனைந்துள்ள போதிலும், அந்த யானை அங்கிருந்த பயன்தரும் தென்னை, வாழை, பப்பாசி, உள்ளிட்ட பல மரங்களை அழித்து துவம்சம் செய்துவிட்டு ஒருவாறு கிராமத்தை விட்டு நகர்ந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மிக நீண்டகாலமாக தாம் எதிர்கொண்டுவரும் இந்த காட்டுயானைப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வைப் பெற்றுத்தருமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை எடுத்துக்கூறியும் அது இற்றைவரையில் தீர்க்கப்படாமல் தொடர் கதையாகவுள்ளமை தமக்கு மிகுந்த வேதனையளிப்பதாக அப்பகுதிவாழ் பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.







SHARE

Author: verified_user

0 Comments: