9 Aug 2021

களுவாஞ்சிகுடி பொலிசாரின் மனிதாபிமான செயல்.

SHARE

களுவாஞ்சிகுடி பொலிசாரின் மனிதாபிமான செயல்.

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேத்தத்தீவு கடற்கரைப் பகுதியில் சனிக்கிழமை(07) மாலை 6 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீழ்ந்து கிடப்பதை அறிந்த அப்பகுதி மக்கள் அவருக்கு அருகில் யாரும் சென்றிருக்கவோ, அவரை மீண்டு வைத்தியசாலைக்குச் செல்லவோ முன்வந்திருக்கவில்லை.

இந்நிலையில் குறித்த பகுதியில் அடையாளம் தெரியத நபர் ஒருவர் வீழ்ந்து கிடப்பது தொடர்பில் தகவல் அறிந்த களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உப்புல் ஊணவர்த்தன உள்ளிட்ட குழுவினரம், அப்பகுதி கிராம சேவை உத்தியோகஸ்த்தரும், இஸ்த்தலத்திற்கு விரைந்து அங்கு வீழ்ந்து கிடப்பவரை அவதானித்துள்ளனர்.

பின்னர் வீழ்ந்து கிடந்தவரை பொலிசாரும், கிராம சேவை உத்தியோகஸ்த்தரும் மீட்டு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் இவ்வாறு பொலிசாரால் அனுப்பி வைக்கப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு 7 மணியளவில் உயிரிழந்துள்ளதாகவும், குறித்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட றப்பிட் அன்ரிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை எவும், வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கிறது. சடலம் தற்போது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் செலுத்திச் சென்றதாகக் கருதப்படும் தவிச்சக்கர வண்டியை மீட்டு பொலிசார் எடுத்துச் சென்றுள்ளனர்.

ஒருவர் வீழ்ந்து கிடக்கும் போது உதவுவதே மனிதாபிமானச் செயலாகும் தற்போதைய கொரோனா அச்சத்தில் மக்கள் இவ்வாறு வீழ்ந்து கிடந்தவருக்கு அருகில் செல்வதற்கு அச்சப்பட்டிருந்தாலும், ஓர் மனித உயிர் வீழ்ந்து கிடக்கின்றதே என்பதை அப்பகுதியில் யாரும் கருத்திற் கொள்ளவில்லை. எனினும் மனிதாபிமானம் இன்னும் மாய்ந்து விடவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக அப்பகுதி கிராம சேவை உத்தியோகஸ்த்தரும், களுவாஞ்சிகுடி பொலிசாரும் துரிதமாக செயற்பட்டு குறித்த நபரை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். எனினும் அவரது உயிர் வைத்தியசாலையில் வைத்து பிரிந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவரின் பெயர், ஊர் என்பன இதுவரையில் அடையாளம் காணப்படவிலலை எனவும், இதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.









SHARE

Author: verified_user

0 Comments: