கிழக்கில் அமைதியான ஹஜ் பெருநாள் கொண்டாட்டங்கள்--பள்ளிவாயல்களில் விசேட தொழுகைகள்.
புதன்கிழமை (21) மலர்ந்துள்ள புனித ஹஜ் பெருநாளை கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மிகவும் அமைதியாகவும் கொரோனா சுகாதார நடைமுறைகளைப் பேணியும் கொண்டாடி வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல பள்ளிவாயல்களிலும் கொரோனா சுகாதார நடைமுறைகளின்கீழ்
இன்று காலை முதல் பள்ளிவாயல்களில் விசேட ஹஜ் பெருநாள் தொழுகைகள் இடம் பெற்றன.
மாவட்டத்தில் பிராதனை தொழுகை மட்டக்களப்பு ஜாமியுஸ் ஜலாம் ஜூம்ஆ
பள்ளிவாயலில் இடம் பெற்றது. பெருநாள் தொழுகையில் சமுக இடைவெளிகளைப் பேணி முகக் கவசம்
அணிந்து குறிப்பிட்ட அளவு பக்தர்கள் பங்கு கொண்டனர். பள்ளிவாயிலின் பேஸ் இமாம்
மௌலவி எம் நியாஸ் தொழுகையை நடாத்தினார்.
கொரோனா அச்சுறுத்தல் நீங்கவும் விசேட பிரார்த்தனைகளும் இடம் பெற்றன.
0 Comments:
Post a Comment