மிக நீண்ட காலமாக கவனிப்பாறற்றுக்கிடக்கும் கணேசபுரம் முதலாம் வட்டார வீதியைப் புரணமைப்புச் செய்து தருமாறு அப்பகுதி மக்கள் வேண்டுகோள்.
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேச சபைக்குட்பட்ட கணேசபுரம் கிராமத்தின் முதலாம் வட்டார பிரதான வீதி மிகவும் நீண்டகாலமாகவிருந்து பழுதடைந்த நிலையில காhணப்படுவதனால் அவ்வீதியைப் பயன்படுத்தும் மக்கள் மிகவும் சிரமத்தின் மத்தியில் பயணிப்பதாக கவலை தெரிவிக்கின்றனர்.
சுற்றிவர வயல் நிலத்தை ஊடறுத்துச் செல்லும் இவ்வீதியை அக்கிராம மக்கள், விவசாயிகள், மாணவர்கள் என பலரும் தினமும் பயன்படுத்தி வருகின்றனர். மழை வெள்ள காலத்தில் முற்றாக வெள்ளத்தினால் மூழ்கடிக்கப்பபடும் இவ்வீதி ஏனைய காலத்தில் சிறுபோக வேளாண்மைச் செய்கைக்குப் பயன்படுத்தும் நீரும் குறித்த வீதியை ஊடறுத்துப் பாய்வதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குப்பட்டே போக்குவரத்துச் செய்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
தேர்தல் காலத்தில் பலர் வந்து எமது வீதியை செப்பனிட்டுத் தருவதாகத் தெரிவித்துச் சென்றுள்ள போதிலும் இதுவரையில் இதுபற்றி யாரும் கவனிக்கவில்லை எனவும் அங்குள்ள மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதி மக்களின் நலங்களைக் கருத்திற் கொண்டு துரிதகதியில் குறித்த வீதியை செப்பனிட்டுத்தருமாறும் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
0 Comments:
Post a Comment