11 Jul 2021

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் இளைஞர் தெரிவு.

SHARE

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் இளைஞர் தெரிவு.

மட்டக்களப்பு மாவட் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் இளைஞர் தெரிவு நிகழ்வு சனிக்கிழமை(11) மாலை கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமைக் காரிலயத்தில் இடம்பெற்றது. 

மட்டக்களப்பு மாவட் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும்> மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுக்களின் பிரதித்தலைவருமான பா.சந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வின்போது மாவட்டத்தின் கல்குடா> மட்டக்களப்பு> மற்றும் பட்டிருப்பு தொகுதிகளுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் இளைஞர் அங்கத்தவர் தெரிவு  இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் இலங்கை மக்கள் இளைஞர் முன்னனியின் தலைவருமாகிய டி.வி.சானக> மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா பொதுஜன இளைஞர்கள் முன்னணியின் செயலாளருமான நிபுன ரணவக, மற்றும் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவரும் பின்தங்கிய கிராமிய இராஜாங்க அமைச்சருமான எஸ்.வியாழேந்திரன் உள்ளிட்டோர் அதிதிகளாக கலந்துகொண்டிருந்தனர்.

தொடர்ந்து வருகைதந்திருந்த இளைஞர்களிடமிருந்து தாம் எதிர்நோக்கும் பிரச்சனைகள்தொடர்பில் ஆராயப்பட்டதுடன்  எதிர்காலத்தில் பிரச்சனைகளுக்கான  தீர்வுகளை பெற்றுத்தருவதாகவும் அமைச்சர்களால் உறுதியளிக்கப்பட்டது.





SHARE

Author: verified_user

0 Comments: