19 Jul 2021

மாதவனை - மயிலத்தமடு பகுதியில் அம்பாறை, பொலன்றுவை மாவட்டங்களிலிருந்து வந்வர்கள் இன்னும்வெளியேறவில்லை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தெரிவிப்பு

SHARE

மாதவனை - மயிலத்தமடு பகுதியில் அம்பாறை, பொலன்றுவை மாவட்டங்களிலிருந்து வந்வர்கள் இன்னும்வெளியேறவில்லை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  சிறிநேசன் தெரிவிப்பு.

மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேசத்திலுள்ள மாதவனை - மயிலத்தமடு பகுதியில் அம்பாறை, பொலன்றுவை மாவட்டங்களிலிருந்து வந்வர்கள் வெளியேறாமல் மீண்டும் பயிர் செய்துகொண்டு, எமது பண்ணையாளர்களின் கால்நடைகளை தாக்கி வருகின்றார்கள் - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  சிறிநேசன் தெரிவி த்துள்ளார்.

மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து சனிக்கிழமை (17)  

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்...

மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேசத்திலுள்ள மாதவனை - மயிலத்தமடு பகுதியில் அம்பாறை, பொலன்றுவை மாவட்டங்களிலிருந்து வந்வர்கள் சித்திரை மாதத்தில் தமது பயிர் அறுவடை முடிந்ததும் வெளியேறிவிடுவார்கள் என  உறுதியளிக்கப்பட்டது.

ஆனால் அவர்கள் முழுமையாக வெளியேறாமல் மீண்டும் பயிர் செய்துகொண்டு, எமது பண்ணையாளர்களின் கால்நடைகளை தாக்கி வருகின்றார்கள்.

தற்போதும்கூட சுமார் 40 பேர் ஏறத்தாள 100 ஏக்கர் நிலப்பரப்பில் மீண்டும் அப்பகுதியில் பயிர் செய்து கொண்டிருக்கின்றார்கள். கடந்த 3 மாத காலத்திற்குள் 10 இற்கு மேற்பட்ட கால்நடைகள் சுடப்பட்டிருக்கின்றன. இதுதொடர்பில் பொலிசில் முறைப்பாடு செய்யப்போனால் பொலிசாரும் உதாசீனம் செய்கின்றார்கள். நாங்கள் பாரம்பரியமாக செய்துவருகின்ற தொழில்களை, எங்களால் செய்ய முடியாமல் நெருக்குவாரங்கள் வரும் இச்சூழ்நிலையில் ஆளும் கட்சியின் அமைச்சர் என்றும், பங்காளிக் கட்சி என்றும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள்,  அந்தப்பக்கமே போகின்றார்களில்லை. மக்களின் கஸ்ற்ற நஸ்றங்களைப்பற்றிச் சிந்திக்கின்றார்களில்லை. இதுபற்றிக் கதைத்தால் மாற்றுக் கருத்துக்களைச் சொல்லி பூசி மெழுகப் பார்க்கின்றார்கள்.

 

கடந்த காலத்தில் மைலத்தமடு, மதவனை பிரதேசத்தில் குடியேறியவர்களை எமது கட்சிபோராடி அவர்களை வெளியேற்றியிருந்தது. அவ்வாறு வெளியேற்றப்பட்டவர்கள் மீண்டும் அங்கு வருகின்றார்கள். இதுபற்றிக் கேட்டால் மூடி மறைத்துக் கொண்டு குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுகின்றார்கள் .

ஒட்டுமொத்தமாக நிலங்கள், கலாசார நிலையங்கள், தொல்லியல் இடங்கள் உள்ளிட்ட அனைத்தும் பறிபோகின்றன. இதற்கு அரச கட்சிக்காரர்கள் வாலைச் சுருட்டிக் கொண்டு துதிபாடிக் கொண்டிருக்கின்றார்கள்.  20வது திருத்தச் சட்டம், துறைமுக ஆணைக்குழுசட்டம் போன்றவற்றிற்கு கை உயர்துகின்றார்கள், மாகாண பாடசாலைகளை தேசி பாடசாலையாக மாற்றுகின்றார்கள், மத்திய அரசு எமது வைத்தியசாலைகளைப் பொறுப்பெடுக்கப் போகின்றது. இந்நிலையில் ஒட்டுமொத்தமாக மாகாண சபையை மாற்றுகின்ற நிலமை வந்தால்கூட அதற்குக்கூட கை உயர்த்தி சரணாகத்தி அரசியலை ஏற்றுக் கொள்கின்றீர்களா?

தயவுசெய்து மட்டக்களப்பில் ஆளும் கட்சியில் இருக்கின்ற இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு நடிவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுக் கருத்துக்களைச் சொல்லி சுதப்பிக் கொண்டிருக்காமல் சட்டரீதியற்ற குடியேற்றக்கார்களை அங்கிருந்த வெளியேற்றி மக்களைப் பாதுக்காக்க வேண்டும். என அவர் இதன்போது தெரிவித்தார்.




 

SHARE

Author: verified_user

0 Comments: